Terms of Use பயன்பாட்டு விதிமுறைகள்

1. சரியான உரலியை (URL) பகிரவும்:

உங்கள் கணக்கிற்கு நீங்கள் தான் நிர்வாகி. எனவே தகுந்த வகைகளுக்கு உண்டான உரலியை மட்டுமே சமர்ப்பிக்கவும்.

2. தமிழ் இணையதள உரலியை சமர்ப்பிக்கவும்:

இது தமிழ் இணையதளங்கள், வலைதளங்கள், குழுக்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தளம். எனவே முடிந்தவரை (அதிக) தமிழ் இணையதள உரலிகளை பகிருங்கள். விதிவிலக்காக, சில வகையினங்களுக்கு (Category) உண்டான தமிழ் இணையதளங்கள் இல்லாத பட்சத்தில், தாராளமாக ஆங்கில இணையதளங்களைப் பகிரலாம்.

3. சரியான குறிசொற்களை பயன்படுத்துங்கள்:

நீங்கள் சமர்ப்பிக்கும் இணையதள முகவரிகள் அல்லது சமர்ப்பிக்கும் கட்டுரைகள், கதைகள், உள்ளடக்களை இனம் காண உதவும் வகையில், சரியான குறிசொற்களைப் பயன்படுத்துங்கள். முடிந்தவரையில் குறிசொற்கள் தமிழிலேயே இருக்கட்டும். ஆங்கில குறிசொற்களைப் பயன்படுத்த நிர்பந்தம் ஏற்பட்டால் தவிர தமிழிலேயே பயன்படுத்தலாம்.

4. விளக்கத்தை(description) எழுதுங்கள்:

நீங்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகள், கதைகள், உள்ளடக்கம் ஆகியவற்றின் போது விளக்கம் (Description) பகுதியில், அதற்குண்டான, சரியான விளக்கத்தை எட்டு வரிகளுக்குள் எழுதவும்.

5. முதலில் தேடுங்கள்:

நீங்கள் சமர்ப்பிக்கப்போகும் உரலிகளை தேடல் பகுதியில் சென்று தேடி, ஏற்கனவே சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை முதலில் உறுதிசெய்யுங்கள்.

6. YouTube பகுதிக்கு:

YouTube காணொளிகளை சமர்ப்பிக்கும்போது, அது ஆங்கில காணொளியாக இருந்தாலும், அதற்கு தலைப்பு, என்ன வகை, குறிசொற்கள் மற்றும் விளக்கம் ஆகியவற்றை நீங்கள் தமிழிலேயே எழுதவேண்டும். ஆங்கில விளக்கங்களைத் தவிர்க்க முயலவும். ஏனெனில் மற்ற பயனர்கள் நமது தளத்தில் தமிழில் தேடிப்பெற வசதியாகவும், எளிதாகவும் இருக்கும்.

7. விளம்பரங்களுக்குத் தடை:

நமது தளம், தமிழில் உள்ள பல்வேறு இணையதளங்கள், வலைதளங்கள் மற்றும் YouTube தளங்களைப் பற்றி பரவலாக மக்களுக்கு அறிமுகப்படுத்தும். எனவே பயனர்கள் உங்கள் இணையதள உள்ளடக்க முகவரிகளையோ, YouTube காணொளி பற்றிய சரியான உரலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட விளம்பர உரலிகளையோ, Affiliate உரலிகளையோ, போலியான சம்பந்தமில்லாத உரலிகளையோ அல்லது மூன்றாம் தரப்பு விளம்பர உரலிகளையோ சமர்ப்பிக்கக் கூடாது எனவும், அப்படி சமர்ப்பித்து நிர்வாகியின் கவனத்திற்கு வரும் பட்சத்தில், சம்பந்தப் பட்ட உரலியையோ அல்லது பயனரையோ நீக்கப்படும் உரிமை நிர்வாகிக்கு உண்டு.

8. தவறான நடவடிக்கைக்குத் தடை:

பயனர்கள் தங்களுக்கு பிடித்த செய்திகள், கதைகள், கட்டுரைகள், உள்ளடக்க உரலிகளை வெற்றிக்குறி அல்லது தோல்விக்குறி கொடுத்து ஆதரிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட உரலிகளுக்கு தொடர்புடைய கருத்துக்கள், ஆட்சேபனைகள் இருந்தால் மறுமொழிகள் வசதி மூலம் தெரிவிக்கலாம். ஆனால் அப்படித் தெரிவிக்கும் மறுமொழியில் தனிநபர் தாக்குதல், ஆபாச கருத்துக்களை எழுதுதல், தவறான செய்திகளை எழுதிப் பரப்புதல் ஆகிய செய்கைகள் தடை செய்யப்படுகின்றன. மீறி மறுமொழி இட்டால் அல்லது பயனர்கள் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட மறுமொழியையோ அல்லது பயனரையோ நீக்க நிர்வாகிக்கு அதிகாரம் உள்ளது.

9. இந்த விதிமுறைகள் மாற்றத்திற்குட்பட்டது:

மேற்க்காணும் விதிமுறைகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எப்போது வேண்டுமானாலும், தளத்தின் மற்றும் பயனரின் முக்கியத்துவம் கருதி மாற்றப்படும்.

உங்களுக்கு ஏதேனும் பிழைகள், மற்றும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக நிர்வாகிக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள் அல்லது support@thiratti.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

திரட்டி குழு

திரட்டி என்றால் என்ன?

திரட்டி என்பது பல்வேறு வகையினங்கள் கொண்ட உள்ளடக்கங்களைப் பகிர்ந்து, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகும். இதன்மூலம் அன்றைய நாளின், வாரத்தில், மாதத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகள், செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.

அதுமட்டுமில்லாமல், புதிய படைப்புகளை பயனர்கள் பகிர்ந்து, திரட்டி தளம் மூலம் தங்களது இணையதளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்களைப் பெற முடியும். இப்போதே உங்களுக்கான கணக்கினைத் தொடங்கி நீங்களும் புகழ்பெறுங்கள்.

சமீபத்திய மறுமொழிகள்